(எம்.மனோசித்ரா)
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமா அதிபரை வாழ்த்தும் அதேவேளை, அவர் தனது கடமைகளை பாரபட்சமின்றி நிறைவேற்றுவார் எனவும் அலுவலகத்தின் சுயாதீனத்தை பேணுவார் என உறுதியாக நம்புவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு சட்டமா அதிபர் சட்டவாட்சியையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் மக்களது அடிப்படை மனித உரிமைகளையும் நிலைநிறுத்துவார் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் இராஜரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் இராஜரட்ணம் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கான நியமனத்தை வரவேற்பதுடன் அவரது கடமைகளை சிறப்பாக மேற்கொள்ளவும் வாழ்த்துகின்றது.
நாட்டின் பிரதான சட்ட ஆலோசகராக சட்டமா அதிபர் , எது சட்டரீதியானது அல்லது சட்டப்பூர்வமற்றது என அரசாங்கத்திற்கு அறிவுறுத்தும் கடமையையும் குற்றவியல் நடைமுறைகளில் பயமோ பக்கச்சார்போ அன்றி சட்டம் பிரயோகிக்கப்படுவதனை உறுதிப்படுத்தும் கடமையையும் கொண்டுள்ளமையினால், எமது நாட்டின் குடிமக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக சட்டமா அதிபர் பதவி விளங்குகிறது.
இதன்பொருட்டு, சட்டமா அதிபராக நியமிக்கப்படும் நபர் கொள்கை ரீதியில் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் செயற்படுவதற்கும் அரசியல் அல்லது ஏனைய சார்புகளின்றி சட்டம் பிரயோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமானவராக இருப்பது அவசியமானதாகின்றது என்று சட்டமா அதிபரது நியமனம் குறித்து 2014 ஆம் ஆண்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையின் சட்ட சகோதரத்துவத்தின் சார்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது அடுத்த நியமனம் மேற்கொள்ளப்படும் போது, இம்முக்கியமான நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திலான உச்ச அடைவுகள் மற்றும் சேவைமூப்பு என்பவற்றிற்கு கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதனையும் எதிர்ப்பார்க்கின்றது.
சஞ்சய் இராஜரட்ணம் சட்டமா அதிபராக நியமிக்கப்படும் சமயத்தில் அவர் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக காணப்பட்டதுடன் 1988 ஆம் ஆண்டிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவையாற்றி சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள அதி சிரேஷ்ட அலுவராகவும் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் இதுபோன்ற ஒரு நியமனம் முதல் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபரை நியமிக்கும் போது முக்கிய நிபந்தனைகளுக்கு உரிய கவனம் செலுத்தியதற்காக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பேரவையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராட்டுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM