அமரர்  ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவு தினம் மே மாதம் 26 ஆம் திகதி கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. 

நிகழ்வில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சி.எல்.எப் காரியாலயத்தில் உள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இதன்போது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு “பிரஜா விருட்சம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.

முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட இ.தொ.காவின் இளைஞர் அணியின் தலைவர் ராஜமணி பிரசாத், செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.