பொரளை பகுதியில் 10 மில்லியன் பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று (25) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மருதானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் (53) இதற்கு முன்னரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணிடம் இருந்து 102 கிராம் 70 மில்லிகிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, ஆணிடமிருந்து 1 கிராம் 70 மில்லிகிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெண் பிரதான சந்தேக நபரெனவும், ஆண் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.