தீக்கிரையான எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பலின் பாகங்கள் நேற்றையதினம் நீர்கொழும்பு மற்றும் வத்தளையை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கின.

இவ்வாறு கரையொதுங்கும் பொருட்களை எவரும் தொட வேண்டாமெனவும் அவற்றில் இரசாயன பதார்த்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக தெரிவித்து ஏற்கனவே அரசாங்கத்தால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரையொதுங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற நபர்களை கைதுசெய்யப்போவதாககத் தெரிவித்து அவர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்ற 8 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.