240 கைதிகளுக்கு விடுதலை

By Gayathri

26 May, 2021 | 07:35 PM
image

(செ.தேன்மொழி)

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 240 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அபராதம் செலுத்தமுடியாமல் சிறைவைக்கப்பட்டவர்களும், ஆயுள்தண்டனை பெற்று 25 வருடகாலத்திற்கும் அதிகமான காலம் சிறைவைக்கப்பட்டிருந்த குறித்த கைதிகள் சுகாதார சட்டவிதிகளுக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைசாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களுக்கு அமைய, தண்டனைச் சட்டக்கோவையின் குறிப்பிட்ட சில குற்றச் செயற்பாடுகளுக்காக தண்டனைப் பெற்றுள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அதற்கமைய, கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை காலத்தில், ஒருவருட காலத்தை பூர்த்தி செய்துள்ள, அதன் குறிப்பிட்ட காலத்தை நிறைவுச் செய்துள்ள கைதிகளுக்கான தண்டனைக் காலத்தில் ஒரு மாதகால தண்டனையை குறைத்தல் மேலும், அபராதம் செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகள் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் தங்களது தண்டனை காலத்தில் அரை பகுதியை முழுமையாகவோ அல்லது அதில் குறிப்பிட்ட ஒரு காலத்தையோ நிறைவுச் செய்திருக்கும் கைதிகள்; ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை 25 ஆக குறைத்து, 25 வருடத்திற்கும் அதிகமான காலம் சிறையில் இருக்கும் கைதிகள்  ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து, 240 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருமே சுகாதார சட்டவிதிகளுக்கமையவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right