அனுராதபுரம் தூபராம விகாரைக்கு அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (28)  அகற்றுமாறு தொல்பொருளியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தூபராம விகாரைக்கு  அருகில் இவ்வாறு சட்டவிரோதமாக 40 வர்த்தக நிலையங்கள் இயங்கி வருவதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கு ஏற்கனவே அறிவித்தல் வழங்கியிருந்த போதும், உரிமையாளர்கள் இன்றுவரை அகற்றவில்லையென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.