சென்னை வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் திரை­யு­ல­கினர் தொடர்ந்து நிவா­ரணப் பணி­களை மேற்­கொண்டு வரு­கி­றார்கள். இந்­நி­லையில் திரு­வள்ளூர் மாவட்­டத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட 3 கிரா­மங்­களை நடிகர் சூர்யா தத்­தெ­டுத்­துள்ளார்.

அவர் இது ­கு­றித்து தெரி­வித்­துள்ள­தா­வது: திரு­வள்ளூர் மாவட்­டத்தில் மழை வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள நெல்வாய், கச்சூர், கேர­கம்­பாக்கம் ஆகிய கிரா­மங்­களை எமது அகரம் அறக்­கட்­டளை தத்­தெ­டுக்­கி­றது. குறித்த இப்­ப­குதி வெள்­ளத்தால் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அங்குள்ள மக்க­ளிடம் எந்த ஒரு அடை­யாள அட்­டையும் இல்­லா­ததால் அவர்­களால் அரசின் உத­வி­களைப் பெற­மு­டி­ய­ாது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.