நாட்டின் வயதானோரில் அரைவாசிப்பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பை விடுத்த அவர், 50 வீதமான  வயோதிபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் இது பாரிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆலோசனைகளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் குறிப்பிட்டளவு வைரஸ் தடுப்பு நடவடிக்கைளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தடுப்பூசி நடவடிக்கைளில் இது முக்கியமானதொரு மைல்கள் கல் என வெள்ளை மாளிகையின் கொவிட்19 எதிர்ப்பு மூத்த ஆலோசகர் எண்டி ஸ்லோவிட் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதிக்குள் 70 வீதமான வயோதிபர்களுக்கு தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே போன்று முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் முகக்கவசத்தை அணிவதுடன் ஏனைய சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.