(செ.தேன்மொழி)

தெமட்டகொட மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த சோதனைகளின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருளுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியில் நேற்று பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 20 கிராம் ஹெரோயின் மற்றும் 7.5 கிராம் ஐஸ் ரக போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டியின் சாரதியும் , அதில் பயணித்த மற்றைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்னுமொரு சந்தேக நபர்கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் 7 நாட்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். 

இந்நிலையில் , சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.