பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் உள்ள பயிர்ச்செய்கை நிலத்திலேயே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.