இலங்கையில் சந்திர கிரகணத்தை நாளை  (26.05.2021) காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

நாளை  பௌர்ணமி வெசக் போயா தினத்தில் சந்திர கிரகணத்தை காண இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, கிரகணத்தின் முழுமையாக இலங்கை மக்கள் அவதானிக்க முடியாது, ஆனால்  பகுதியளவு சந்திர கிரகணத்தை அதன் கடைசி 57 நிமிடங்களை நாளை மாலை 6.23 மணி முதல் இரவு 7.19 மணி வரை காண முடியும், என்றார்.

ஆனால் தென்னமெரிக்கா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியாவில் சந்திர கிரகணம் முழுமையாக தெரியும்.

மேலும் இந்த முழுமையான சந்திர கிரகணத்தின் போது சுமார் 14 நிமிடங்கள் சிவப்பு நிழலாக வானிலை மாற்றமடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.