சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 745 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 13,493 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.