வவுனியா நெடுங்கேணி அரியாமடுப்பகுதியில்  அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிக்கசென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை 4 அரியாமடு பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். 

இதன்போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயதாஸ் வயது 44என்ற நபரே மரணமடைந்துள்ளார்.  

சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக  நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.