(நா.தனுஜா)
அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை உபயோகித்து நாட்டுமக்களின் சுதந்திர உரிமைகளை பறிக்கும் வகையிலான வெறுக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது.
நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலேனும், அரசாங்கம் தமது அற்ப அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு எடுக்கும் பிரயத்தனங்களைக் கைவிட்டு கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வறிக்கையொன்றை வெளியிட்டு இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தற்போதைய அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை உபயோகித்து நாட்டுமக்களின் சுதந்திர உரிமைகளை பறிக்கும் வகையிலான வெறுக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.
இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் நாட்டுமக்களின் ஜனநாயக சுதந்திரத்தை மழுங்கடிக்கும் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.
அரசியலமைப்பிற்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை போன்றனவற்றின் மூலம் சட்டத்தின் ஆட்சியையும் நாட்டின் ஜனநாயகத்தின் இருப்பை மதிக்காத தன்மையின் போக்கையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புலப்படுகிறது.
சுகாதார அமைச்சின் செயலாளர், அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதற்குரிய உரிமைக்கு தடைகளை ஏற்படுத்துவதிலிருந்து புலப்படுவது கொவிட் - 19 பேரழிவின் பெயரில் இந்நாட்டுப் பிரஜைகளின் சுதந்திர உரிமைகளை பறிக்கும் மிலேச்சத்தனமான முயற்சி இடம்பெறுகின்றது என்பதேயாகும்.
அரசாங்கம் கையாளும் நடைமுறைகள், ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய திறந்த கலந்துரையாடல் என்பவற்றிற்கு தடைகளை ஏற்படுத்த விளைவதன் மூலம் அரசாங்கம் தகவல்களை மறைப்பதற்கு முற்படுகின்றதல்லவா? மக்களுக்காக தாம் சரியான முடிவுகளை நடைமுறையில் பிறப்பிப்பதாக இருந்தால் திறந்த கருத்துத் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. அரசாங்கம் தற்பெருமை மனோபாவத்திலிருந்து மீண்டு, யதார்த்தபூர்வமாக இத்துறைசார் செயற்பாடுகளில் குறித்த வைத்திய பிரபலங்கள் மற்றும் விஷேட நிபுணர்களின் வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயற்பட முன்வரவேண்டும்.
கொவிட் - 19 பரவல் நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்தே அதுகுறித்து சற்றும் பொருட்படுத்தாது முன்னாயத்த நடைமுறைகளைக் கையாளாததன் விளைவுகளையே இன்று நாடு அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கொவிட் வைரஸ் பரவலின் ஆபத்து குறித்து முன்னரே அறிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதிகளில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இதுகுறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தமையை ஞாபகப்படுத்துகின்றேன்.
முதலாவது எச்சரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் வைரஸ் பரவலோ அல்லது தொற்றாளர்களோ இனங்காணப்பட்டிருக்கவில்லை. இரண்டாவது எசந்தர்ப்த்தில் நாட்டில் ஒரு தொற்றாளர் மாத்திரம் இனங்காணப்பட்டிருந்தார். இச்சந்தர்ப்பங்களில் இந்நோயின் ஆபத்துகள் குறித்தும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு சுட்டிக்காட்டியபோது ஆளுந்தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவரை கொச்சைப்படுத்தினர்.
தற்போது நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இக்கட்டான சூழ்நிலையின் பின்னரேனும், அரசாங்கம் தமது அற்ப அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு எடுக்கும் பிரயத்தனங்களைக் கைவிட்டு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து பரந்த தூரநோக்கில் ஆபத்தான பேரழிவிலிருந்து நாட்டை மீட்க கூட்டுப்பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM