சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமான டாலியன் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்துள்ளது.

இந்த விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 11:47 மணியளவில்  வீதியை  கடந்த பாதசாரிகள் பலரை தாக்கிவிட்டு கார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக டாலியனின் பொது பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 04 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

அதேவேளை காயமடைந்த மேலும் 05 பேர் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்திற்கு காரணமான சாரதி பிடிபட்டுள்ளார். மேலதிக விசாரணை நடந்து வருகிறது.