நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக்கொள்ள சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: நாமல் ராஜபக்ஷ

Published By: J.G.Stephan

24 May, 2021 | 04:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)
கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக்கொள்ள  பொதுமக்களும், செல்வந்தர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்லவும்  அரசாங்கத்திடம் போதியளவு நிதி உள்ளது. நிதி பற்றாக்குறை இல்லை.  எனினும் பொதுமக்களும் செல்வந்தர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் நிதியுதவி வழங்குவதன் மூலம் கொவிட் -19  வைரஸ் தாக்கத்தை முற்றாக கட்டுப்படுத்த முடியும்.

நாட்டில் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள், எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பாக அறிந்துகொள்ள கண்காணிப்பில் அரச அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளார்கள்.

கொவிட்  பிரச்சினையானது, எமது நாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல. முழு உலகமும் இந்த இக்கட்டான நிலைக்கு முகம்கொடுத்துள்ளன. எமது அயல்நாடான இந்தியா முழு உலகுகுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கியது ஆனால் இன்று அந்த நாட்டுக்கு தடுப்பூசி இல்லாமல் தேடிக்கொண்டிருக்கின்றது. அந்தளவுக்கு அங்கு தொற்று பரவியுள்ளது.

ஆனால் நாம் வெற்றிகரமாக இத்தொற்று பரவலை கட்டுத்தியுள்ளோம். தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் நாம் முன்னணியில் இருக்கின்றோம். எனவே இது தனியாக மேலெழும் விடயமல்ல. உலகத்துடன் இணைந்தே இதிலிருந்து மேலெழும்ப வேண்டும். எனவே இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனால் தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிறியளவு பொருளாதார வளர்ச்சியுள்ள நாடுகளுடன் இணைந்து அந்த நாடுகளுக்கு உதவிகளை செய்வதுடன் கொரோனா போராட்டத்துக்கு முகம்கொடுக்க முன்வருமாறு தெளிவாக ஆசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலகின் பலமிக்க நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25