கே.ஏ. பாயிஸ் இறுதிக்கட்ட போரில்  சிறுபான்மையின மக்களுக்காக துணிச்சலுடன் செயற்பட்டவர் - பெ. இராதாகிருஷ்ணன் 

By Digital Desk 2

24 May, 2021 | 04:40 PM
image

செய்திப்பிரிவு

இறுதிக்கட்ட போர் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக துணிந்து குரல் கொடுத்த கே.ஏ.பாயிஸின் இழப்பு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது.

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் புத்தளம் நகரசபை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாயிஸின் இழப்பு ஈடுசெய்ய முடியாது.

அவர் சிறுபான்மை சமூகத்தினருக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்தவர் என முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,


இறுதிக்கட்ட போரின் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ளவர்கின் விசாரணைகளை கண்காணிக்க ராஜித சேனாரத்ன , வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும மற்றும் பாயிஸ் ஆகியோருடன் என்னையும் இணைத்து ஒழு குழு அமைக்கப்பட்டது.


இந்த குழுவின் முக்கியமானதொன்றாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கண்காணிப்பது காணப்பட்டது. இந்த காலப்பகுதியில் மறைந்த  கே.ஏ.பாயிசுடன் நெருங்கி சேவையாற்றிருக்கின்றோம்.

அவர் சிறுபான்மை சமூகத்தினருக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.  தைரியமாக குரல் கொடுத்தவர் . அவரது மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மூவின மக்களுக்காகவும் சேவை செய்துள்ளார் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீரக விற்பனை விவகாரம் - குற்றம்சாட்டப்படும்...

2022-12-08 15:46:01
news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 15:50:49
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01