நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை நாடு முழுவதும் தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாட்டை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை (25.05.2021), 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்களுக்கு  அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாளை  25 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது பொதுப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

இதேவேளை, மே 25 ஆம் திகதி, மே 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதி ஆகிய நாட்களில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியுமெனவும் நடை பயணத்தில் மாத்திரமே வெளியில் சென்று அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.