சிறார்களை பாதிக்கும் மல்டி சிஸ்டம் இன்ஃப்ளமெட்ரி சிண்ட்ரோம்

By Gayathri

24 May, 2021 | 04:36 PM
image

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட 12 மற்றும் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மல்டி சிஸ்டம் இன்ஃப்ளமெட்ரி சிண்ட்ரோம் எனப்படும் பல உறுப்பு வீக்க பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் வரை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் பலருக்கும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ‘பிளாக் ஃபங்கஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்ஜை தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். 

இதே சூழலில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட 15 வயதிற்குட்பட்ட சிறார்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியான ஆண்டிஜனின் அளவு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மல்டி சிஸ்டம் இன்ஃபிளமெட்ரி சிஸ்டம் எனப்படும் பல உறுப்பு வீக்க பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் வீக்கம் ஏற்படும். இது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தல்ல என்றாலும், இந்த பாதிப்பால் சிறார்கள் நாளடைவில் பாரிய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கொரோனாத் தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட சிறார்கள், அந்த நிலையிலிருந்து நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனை குணப்படுத்துவது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக மருத்துவர்கள், பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்படுவதிலிருந்து முழுமையாக தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு அறிவித்திருக்கும் மருத்துவ நடைமுறைகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 

டொக்டர் சதீஷ்குமார்,


தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right