யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

வெலிமடை பகுதியை சேர்ந்த குணசேகர (வயது 33) எனும் இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி வந்த குறித்த சிப்பாய் கடந்த 19 ஆம் திகதி விடுமுறையில் பேரூந்தில் வீடு நோக்கி பயணித்தவேளை உரும்பிராய் பகுதியில் வீதியின் குறுக்கே ஓடிய நாய் ஒன்றை கண்ணுற்று பேருந்து சாரதி திடீரென பிரேக் அடித்ததால் பேருந்தில் இருந்து சிப்பாய் நிலைதடுமாறி வீதியில் விழுந்து படுகாயமடைந்தார். 

படுகாயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.