கணக்காய்வாளர் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளுக்குமான அறிக்கைகளை http://www.auditorgeneral.gov.lk/ என்ற கணக்காய்வாளர் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பயனாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர் ,அறிக்கைகள் உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் . இதனை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி 2014 ஆம் ஆண்டிற்கு முன்னைய நான்கு ஆண்டுகளினது அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.