இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்திட்டங்கள் உள்ளடங்கிய ஒப்பந்தம் இன்று டொரிங்ரன் உள்ளக விளையாட்டரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதுருசூரிய மற்றும் இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் சென்செய். சிசிர குமார , செயலாளர் சென்செய் கீர்த்தி குமார ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் உப தலைவர் சென்செய். நதித்த சொய்சா, மேல்மாகாண தலைவர் சென்செய்.நீல், தொழில்நுட்ப குழு ஆலோசகர் சென்செய்.ஜெயசிறி பெரேரா, தேசிய தெரிவுக்குழு உறுப்பினர் சென்செய்.அன்ரோ டினேஸ், தேசிய அணி பயிற்றுனர்கள் சென்செய்.தேஸாதி குரே, சென்செய்.சமிந்த, சென்செய்.கல்யாண ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கும் தேசிய கராத்தே அணி வீரர்களை மேம்படுத்தும் திட்டங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM