பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தன்னை சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாலேயே பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தன்னை சுயத்தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடதக்கது.