'தல' அஜித் நடித்து வரும் 'வலிமை' திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
'தல' அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வலிமை'. இதிலும் 'தல' அஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துவருகிறார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரிக்கும்போது,' இந்த படத்தில் முக்கியமான ஒரு துவிச்சக்கர பந்தய காட்சி ஒன்றை படமாக்க வேண்டும். அந்த காட்சி ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிட்டு, அதற்கான படப்பிடிப்பு நடைபெறும் தளம் மற்றும் அதில் பங்குபற்றும் துவிச்சக்கர பந்தய வீரர்கள் ஆகியோர்களும் தெரிவுசெய்யப்பட்டு, படக்குழுவினர் சார்பில் முன்பணமும் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. இந்த சூழலில் தான் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கு சாத்தியமில்லாத சூழல் உருவானது. இதனால் அங்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட துவிச்சக்கர பந்தய வீரர்களை இந்தியாவுக்கு வரவழைப்பதற்கான முயற்சியும் நடைபெற்றது. அதிலும் காலதாமதம் ஏற்பட்டதால், குறிப்பிட்ட இந்த காட்சி படமாக்கப்படுவது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இந்த காட்சி இப்படத்தின் முக்கியமான காட்சி என்பதாலும், அதாவது ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் உணர்ச்சி மேலிடும் காட்சிகள் என்பதாலும் இதனை படமாக்காமல் படத்தை இறுதி செய்ய இயலாது என இயக்குனரும் உறுதிபட தெரிவித்திருப்பதால் இப்படம் திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகாது' என்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக திரையுலகினர் சிலர் 'தல' அஜித்தின் 'வலிமை' தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM