டோக்கியோ ஒலிம்பிக் ; தடுப்பூசி நடவடிக்கையை விரைவுபடுத்தியுள்ள ஜப்பான்

Published By: Vishnu

24 May, 2021 | 11:42 AM
image

டோக்கியோ மற்றும் ஒசாகாவில் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை ஜப்பான் இராணுவ மருத்துவர்களும், செவிலியர்களும் திங்கட்கிழமை விரைவுபடுத்தியுள்ளது.

ஒலிம்பிக் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் ஜப்பான் தடுப்பூசி செலுத்தலை விரைவுபடுத்தியுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதற்கும் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

பிரதம அமைச்சர் யோஷிஹைட் சுகா ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு இந்த கோடையில் டோக்கியோவில் ஒலிம்பிக்கை நடத்துவதில் உறுதியாக உள்ளார்.

மேலும் ஜூலை மாத இறுதிக்குள் நாட்டின் 36 மில்லியன் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதாக உறுதி மொழியையும் அளித்துள்ளார்.

அதேநேரம் பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 23 ஆம் திகதி தொடங்கவிருக்கும் விளையாட்டுகளை இரத்து செய்வதற்கான அழைப்புகளும் வெளிவந்த வகையிலேயே உள்ளன.

சுகாவின் அரசாங்கம் ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து வைரஸ் அவசரகால நிலையினை மீண்டும் விரிவுபடுத்தியுள்ளது.

தற்போது டோக்கியோ மற்றும் நாட்டின் பிற மக்கள் தொகையில் 40 சதவீதமானோர் வசிக்கும் 9 பிற பகுதிகள் அவசரநிலைக்கு உட்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22