மன்னாரில் தற்போதைய கொரோனா நிலை குறித்து வைத்தியர் ரி.வினோதன் விளக்கம்

Published By: Digital Desk 2

24 May, 2021 | 12:45 PM
image

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (24) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவும் , ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களாகவும்,சிறைச்சாலை உத்தியோகத்தர்களாகவும்  காணப்படுகின்றனர். 

இந்த நிலையில் இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 82 கொரோனா தொற்றாளர்களும், தற்போது வரை மொத்தமாக 442 நபர்களும், இந்த வருடம் மாத்திரம் 425 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் தற்போது வரை 2 ஆயிரத்து 72 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும் மன்னார் தாரபுரம் துருக்கி சிட்டி பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் மன்னார், வவுனியா மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த வார இறுதியில் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து கொண்டு வீடு செல்ல உள்ளனர்.

நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(25) பயணக்கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்படாமல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் தேவை இன்றி வீடுகளில் இருந்து வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம். அவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வரும் போது வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் வருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41