சஜித் பிரேமதாச, அவரது துணைவியார் விரைவில் மீண்டுவர ஜனாதிபதி மற்றும் பிரதமர் பிரார்த்தனை பதிவு..!

By J.G.Stephan

24 May, 2021 | 10:08 AM
image

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் அவரது மனைவி திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

குறித்த தகவலை, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்க் கட்சித் தலைவரும், அவரது பாரியாரும் விரைவில், நலம்பெற வேண்டுமென நாட்டுமக்கள் பிரார்த்தித்துவருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் தமது உத்தியோகப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிவில் கூறியிருந்ததாவது,

"கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் - என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது துணைவியார் என் அன்புக்குரிய திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோர் அந்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டு வர, எமது நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன்."

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  பதிவில் கூறியிருந்ததாவது,

"நோய் தொற்று பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ள எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது துணைவியார் திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோர், தேக ஆரோக்கியம் பெறவேண்டுமென்றும், விரைவில் நலம்பெறவேண்டுமென்றும் தான் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.”

முக்கிய செய்திகள்

icon-left
icon-right