(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு அவசர அழைப்பு பிரிவில் சேவையாற்றும் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

புறக்கோட்டை பகுதியில் வைத்து இந்த தங்கச் சங்கிலி இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் கூறினர்.

கொள்ளையிடப்பட்டுள்ள தங்கச் சங்கிலி,  சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வரை பெறுமதியானது என பொலிஸார் கூறினர்.

கடந்த சில திங்களுக்கு முன்னர், கடமைகளை நிறைவு செய்துவிட்டு,  கொழும்பு 15, அளுத்மாவத்தை பகுதியில் உள்ள   பொலிஸ் வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள வீடு நோக்கி சென்றுள்ளார். 

இதன்போதே அவரை பின் தொடர்ந்து வந்துள்ள அடையாளம் தெரியாத நபர்கள் புறக்கோட்டை பகுதியில் வைத்து,   அவரின் சுமார் 2 பவுன் நிறை உடைய குறித்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும், இதுவரை சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்படவில்லை.