மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர்  ஞாயிற்றுக்கிழமை(23)  உயிரிழந்துள்ளார். 

அதேவேளை  மாவட்டத்தில்  இன்று ஆடைதொழிற்சாலையில் பணிபரியும் 12 பேர் உட்பட 54 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் தெரிவித்தார்.

பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும்,  ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் , களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் , வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும்,

ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  மற்றும் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியுந்துவரும் 12 பேர் உட்பட 54 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி   மிகுந்த அவதானத்துடன் செயற்படடுமாறு அவர் கோட்டுக் கொண்டார்.