கொரோனாவால் இதுவரை 5 கர்ப்பிணிகள் உயிரிழப்பு : நாட்டில் 2945 பேருக்கு இன்று கொவிட் தொற்றுறுதி

Published By: Digital Desk 3

23 May, 2021 | 09:35 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சனிக்கிழமை கொவிட் தொற்றுக்குள்ளான மற்றுமொரு கர்ப்பிணி தாயும் உயிரிழந்துள்ளதோடு , மேலும் 46 கொவிட் மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய கர்ப்பிணியொருவரே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய இலங்கையில் இது வரையில் கொவிட் தொற்றால் 5 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சனியன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் நேற்று சனிக்கிழமை வரை பதிவாகியமையாகும். 

அதற்கமைய மீட்டியாகொட, அக்மீமன, பதுளை, ஹவ்பே, காலி, ஹல்விட்டிகல, உனவட்டுன, அஹங்கம, தொடங்தூவ, கந்தேபொல, நுவரெலியா, பல்லேவெல, கொழும்பு-15, அக்குரங்கொட, வஸ்கடுவ, தெகட்டன, பயாகல, பொரலஸ்கமுவ, உடஹமுல்ல, பேராதனை, மெனிக்ஹின்ன, கட்டுகஸ்தோட்டை, பிலிமத்தலாவ, கந்தானை மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 37 - 93 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும், ரத்கம, பத்தேகம, இமதூவ, கரந்தெனிய, பட்டபொல, வத்தளை, மினுவாங்கொட, குருணாகல், களுத்துறை, யக்கல, மாலபே, பேராதனை, கொழும்பு-15 மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29 - 92 வயதுக்கு இடைப்பட்ட பெண்களும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1178 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று ஞாயிறுக்கிழமை இரவு 9.30 மணி வரை நாட்டில் 2945 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நாட்டில் நேற்று மாலை வரை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 186 ஆகும். 

இவர்களில் 66 501 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களாவர். இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 26 994 பேர் குணமடைந்துள்ளதோடு , 33 734 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 1635 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5755 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53