(செ.தேன்மொழி)

கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் -  தொண்டமனாறு கடற்கரையோரத்தில் 39 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா தொகை மீட்க்கப்பட்டுள்ளது. 

இந்த கஞ்சா தொகை இன்று ஞாயிறுக்கிழமை அழிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் -  தொண்டமனாறு கடற் பகுதியில் நேற்று சனிக்கிழமை கடற்படையினரால் விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடற்கரையோரத்தில் சந்தேகத்திற்கிடமான 4 பொதிகளிலிருந்து 131 கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையை கருத்திற் கொண்டு , சந்தேக நபர்கள் இந்த கேரள கஞ்சா தொகையை கைவிட்டு சென்றிருக்கலாம் என்று கடற்படையினர் சந்தேகிக்கிப்பதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.