நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் முக்கிய வீதிகளில் பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.

அத்தியாவசியத் தேவை தவிர்ந்து வீதிகளில் பயணிப்போர் எச்சரிக்கை செய்து வீடுகளிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

அத்தோடு அத்தியாவசிய தேவையின் பொருட்டு வீதியில் பயணம் செய்வோரும் தமது பணி அடையாள அட்டை மற்றும் தமக்குரிய அனுமதிப்பத்திரங்களை காண்பித்த பின்னரே வீதியால் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணியினரால் குறித்து நடவடிக்கையானது யாழ்ப்பாண நகரத்தின் முக்கியமான வீதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.