திருகோணமலையில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

23 May, 2021 | 04:53 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து 2695 ஆக அதிகரித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (23) திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 6 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தி உயிரிழந்ததையடுத்து இந்த 3ஆம் அலையில் இதுரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை குறிஞ்சாக்கேணி மற்றும் உப்புவெளி  சுகாதார வைத்திய அதிகாரிகள்  பிரிவுகளில் தலா 8 பேர் வீதம் 16 பேரும், கிண்ணியா மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 7 பேர் வீதம் 14 பேரும், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், கந்தளாய், கோமரங்கடவை, தம்பலகாமம் ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா இருவர் வீதம் 6 பேர் உட்பட 61 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் இதுவரை 1254 கொரோனா தொற்று ஊறதி கண்டயியப்பட்டதையடுத்து 2695 பேராக  அதிகரித்துள்ளதுடன் இந்த 3 ஆம் அலையில் திருகோணமலையில் 13 பேரும், கிண்ணியாவில் 17 பேரும், குறிங்சாக்கேணி 9 பேரும், உப்புவெளி 12 பேரும் , மூதூர்; 5 பேரும்.  கந்தளாய் 3 பேரும். குச்சவெளியில் ஒருவர் உட்பட 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி வீடுகளில் இருந்து வெளியே செல்லாது கவனமான செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26