கொட்டகலை, டிரைடன் தோட்டத்தில் இன்று முற்பகல் 11.30  மணியளவில் மின்னல் மின்னல் தாக்குதலுக்குள்ளான 17 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

டிரைடன் தோட்டத்தில் கொழுந்து நிறுக்கும் மடுவத்தில் கொழுந்து நிறுத்துக் கொண்டிருக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய அனைத்து தொழிலாளர்களும் ஆண்கள் எனவும், சம்பவத்தையடுத்து ஏனைய தொழிலார்களை வீடுகளுக்கு செல்லுமாறும் தோட்ட முகாமையாளர் பணித்துள்ளார்.