ஆர்.ராம்

மனிதக்குழுமமொன்றைமுழுமையாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும்வெவ்வேறு வடிவங்களிலான செயற்பாடுகள் இனப்படுகொலை என்று வரையறை செய்யப்படுகின்றன.

அதேநேரம்,ஒரு தேசிய இனத்தை அல்லதுசமய குழுவை முழுதாகவோ அல்லதுபகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும்செயற்பாடுகள் இனப்படுகொலை என்று ஐக்கிய நாடுகள்சபையின் தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

‘ஜெனோசைட்’(GENOCIDE) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்இனப்படுகொலை என்ற சொல்லில் முதல்பாதிச் சொல்லான “ஜெனொ” என்பது ‘பூர்வீகஇனம்’ அல்லது ‘பழங்குடி’ என்பதைக்குறிக்கும் கிரேக்க சொல்லாகும். பிற்பாதியான,‘சைட்’ எனப்படுவது ‘கொல்லப்படுதல்’ என்ற பொருளைத் தரும்இலத்தீன் சொல்லாகும். 

யூத இனப்படுகொலையின் போது தனது சகோதரன்தவிர ஏனைய குடும்ப உறுப்பினர்கள்அனைவரையும் இழந்த ரஃபேல் என்பவர்இனப்படுகொலை சர்வதேச சட்டத்தின் கீழ்குற்றமாக இனங்காணப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை முன்னெடுக்கலானார்.

அதனையடுத்தே1948 டிசம்பரில் இனப்படுகொலைக்கான வியாக்கியானங்களும், சட்டங்களும் ஐக்கிய நாடுகள் சபையின்தீர்மானத்தில் உள்வாங்கப்பட்டு பின்னர் 1951 ஜனவரியில் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்குஅண்மித்த காலப்பகுதியில் மூன்று இனப் படுகொலச்சம்பவங்கள்நிகழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

முதலாவதாக,1915இக்கும் 1920இக்கும் இடையில், ஒட்டோமான்துருக்கியர்களால் பெரும் எண்ணிக்கையிலான ஆர்மீனியர்கள்படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாவதாக, ஹிட்லரின் தலைமையிலான நாஜிக்களால் 60இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.மூன்றாவதாக, 1932, 1933இல் உக்ரைனில் சோவியத்ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சத்தால் மக்கள் உயிரிழந்தனர். 

இனப்படுகொலைக்கானவரைவிலக்கணமும், வரலாறுகளும் இவ்வாறிருக்க, இனப்படுகொலைக்கான செயற்பாடுகள் மனித வாழ்வியலின் சமூகநீதிக்கோட்பாட்டிற்கு முற்றிலும் நேரெதிரானதாகவே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-23#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.