நேபாளத்தின் இறையாண்மை எல்லைகளுடன் சீனா மீண்டும் பதற்ற நிலையை தோற்றிவித்துள்ளது. வரலாற்று நட்பு ரீதியான உறவுகளை கொண்ட இரு நாடுகளும் தற்போது சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளதுடன் உலகளாவிய கவனத்திற்கும் உள்ளாகியுள்ளன. இங்கு இருப்பது எல்லை பிரச்சினையாகும்.
நேபாள எல்லைக்குள் 10.5 மீற்றர் உள்ளே நுழைந்து தொல்கா மாவட்டத்தில் விகு கிராமத்திற்கு அருகில் மாற்றுப்படை ஊடுருவியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மறுப்புறம் நேபாளத்தின் 60 ஆவது எல்லை தூண்மாயமாகியுள்ளது. அந்த பகுதியில் இரு சீனக் கொடிகள் காணப்பட்டதால் அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சீனா - நேபாள எல்லை வரலாற்று ரீதியாக ஒரு கட்டுப்படுத்தப்பட்ட எல்லை பகுதியாகும். 1960 இல் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒப்பந்தத்தால் நிறுவப்பட்டது. இதன் பின்னரே இரு தரப்பும் எல்லை நிர்ணயம் செய்வதற்கான தூண்களைக் அமைத்தன. இதன் பின்னர், நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைக் கோடு முக்கியமாக 76 நிரந்தர எல்லைத் தூண்களை நிறுவுவது உட்பட பல மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் சீனா தற்போது தனக்கு சாதகமாக நிலைமையை இங்கு மாற்ற முயற்சிக்கிறது.
நேபாளத்தில் எல்லைத் தூண் மாயமான விடயம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. நேபாளத்தின் கணக்கெடுப்பின்படி, கோர்கா, டோலாகா, ஹம்லா, தர்ச்சுலா, சிந்துபால், ரசுவா மற்றும் சங்குவாசபா உள்ளிட்ட பல எல்லை மாவட்டங்களை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
சிறிய அண்டைய நாடுகளுக்கு எதிரான சீனாவின் இரக்கமற்ற முயற்சியால் நீண்டகால இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவு மற்றும் அதிக செலவு காரணமாக எந்தவொரு எல்லை பிரச்சினையிலும் சீனாவுடன் ஈடுபட நேபாளம் அதிக அக்கறை காட்டவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM