ஆஸி அணித் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம் ;  தாய்நாடு திரும்பினார்  ஸ்மித்

Published By: Priyatharshan

25 Aug, 2016 | 10:20 AM
image

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் தலைமைப்பொறுப்பை வோர்னரிடம் கையளித்துவிட்டு தாய் நாடு திரும்பினார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 தோல்வியடைந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்று முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்று 1-1 என்று சமநிலை பெற்றுள்ளன.

இந்த நிலையில், இத் தொடரில் மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளுக்கும் 2 இருபதுக்கு -20 போட்டிகளுக்கும் புதிய அணித்தலைவராக டேவிட் வோர்னரை  அவுஸ்திரேலியா கிரிக்கெட் நியமித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர்  10 போட்டிகளில் ஸ்மித் தலைமையில் விளையாடிய அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி எந்தவொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை.

இந்நிலையில், ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று 3-0 என தொடரை இழந்து, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்தது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவராக செயற்பட்ட ஸ்டீவன் ஸ்மித் நாட்டுக்கு அழைக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டேவிட் வோர்னர்  அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் பிரதம தேர்வாளர் ரோட் மார்ஸின் தெரிவிக்கையில்,

அடுத்து வரவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் முழுமையான கவனத்தை செலுத்தும் முகமாகவே ஸ்மித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, வோர்னர் தலைவராக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தும் 23 ஆவது தலைவராகவும், 10 ஆவது இருபதுக்கு -20 போட்டிகளின் அணித் தலைவராகவும் டேவிட் வோர்னர்  இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும்  இலங்கை அணிக்கும் இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11