நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக மஹிந்த ஆத­ரவு அணி­யினால் கொண்டு வரப்­ப­டு­கின்ற நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யா­னது உண்­மையில் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ரா­னது அல்ல. மாறாக அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவே இதனை கொண்டு வர முற்­ப­டு­கின்­றனர். எந்­த­வொரு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யையும் எதிர்­கொள்ளத் தயா­ரா­கவே இருக்­கிறோம்.

எனினும் நாம் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கே மதிப்­ப­ளிப்போம். மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்கப் பெற்ற வரவு செல­வுத்­திட்டம் தொடர்பில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வர முடி­யாது என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க

நேற்று சபையில் தெரி­வித்தார்.

இதே­வேளை இல­வசக் கல்­வியை இல்­லாது செய்­வ­தற்கு முயற்­சித்­தது யார். வடக்கின் கல்­வித்­து­றைக்­கான நிதியை இல்­லாது செய்­தது யார் இதனை என்னால் இங்கு ஒப்­பு­விக்க முடியும். அதனை நான் நிரூ­பித்தால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, முன்னாள் கல்வி அமைச்சர் பத்­துல குண­வர்த்­தன ஆகியோர் பாரா­ளு­மன்றப் பத­வி­யி­லி­ருந்து விலகிக் கொள்­கி­றீர்­களா என்றும் சவால் விடுத்தார்.

மேலும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை என்­ப­தற்குப் பதி­லாக தெரிவுக் குழுவை நிய­மித்து கார­ணங்­களைக் கண்­ட­றிய முடியும் என்று பிர­தமர் வலி­யு­றுத்­திய போதிலும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையே வேண்டும் என்று மஹிந்த ஆத­ரவு அணியும் ஜே.வி.பியும் கோரின. எனினும் இவ் விட­யத்தை ஜன­வரி மாதத்தின் பின்னர் பேசிக் கொள்­ளலாம் என்று சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய திட்­ட­வட்­ட­மாக சபையில் கடும் தொனியில் அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் ஏற்­பட்­டி­ருந்த சர்ச்சை நிலை முடி­வுக்கு வந்­தது.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 9.30 க்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. சபையின் பிர­தான நட­வ­டிக்­கை­களின் பின்னர் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக மஹிந்த ஆத­ரவு அணி­யினர் சபா­நா­ய­க­ருக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­யை­ய­டுத்து ஆளும் கட்­சி­யி­ன­ருக்கும் எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் இடையில் வாக்­கு­வா­தமும் கருத்து மோதலும் சர்ச்சை நிலையும் எழுந்­தது.

வாசு­தேவ

முன்­ன­தாக ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய மஹிந்த ஆத­ரவு அணியின் வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. கூறு­கையில் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்றை நாம் முன்­வைத்­துள்ளோம். அதனை விவா­திப்­ப­தற்­கான திகதி இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆதலால் அது எப்­போது விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் என்­பது குறித்த திக­தியை அறி­விக்க முடி­யுமா எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

சபா­நா­யகர்

இதற்குப் பதி­ல­ளித்த சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறு­கையில் இவ்­வி­டயம் தொடர்பில் நேற்று (நேற்று முன்­தினம்) இடம்­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கவனம் செலுத்­தப்­பட்­ட­துடன் ஜன­வரி மாதத்தின் அமர்­வு­களின் போது இது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

சபை முதல்வர்

இதே­வேளை எழுந்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல கூறு­கயைில் உண்­மை­யா­கவே கூறு­வ­தாயின் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைத்­தி­ருக்­கின்­றது. இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை என்­பது வேடிக்­கை­யாக இருக்­கி­றது என்றார். அத்­துடன் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கையொப்­ப­மிட்­டி­ருக்­க­வில்லை என்றார்.

இதன் போது சபையில் குழப்ப நிலை ஏற்­பட்­டது.

அனுர குமார

இதன் போது கருத்து வெளி­யிட்ட ஜே.வி.பி தலை­வரும் எதிர்க்­கட்சிப் பிர­தம கொற­டா­வு­மான அனுர குமார திசா­நா­யக்க எம்.பி. கூறு­கையில்

நிதி­ய­மைச்­ச­ரினால் கொண்­டு­வ­ரப்­பட்ட வரவு செலவுத் திட்­டத்­தையும் அவ­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யையும் ஒன்­றாக நோக்க முடி­யாது. வரவு செலவுத் திட்­டத்தை சபையில் சமர்ப்­பித்து அதற்கு ஆத­ரவு எதிர்ப்பு தொடர்பில் வாக்­கெ­டுப்­புக்­கு­வி­டுத்து பிர­தி­ப­லனைக் கண்­ட­றிய முடியும். எனினும் நிதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ர­ணையை கொண்டு வர முடி­யாது எனக் கூறி­விட முடி­யாது. இது நியா­யமும் இல்லை என்றார்.

பிர­தமர்

இத­னை­ய­டுத்து விளக்­க­ம­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­கையில்

அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் பிர­காரம் நாம் எடுத்து நோக்­கு­வோ­மெனில் வரவு செலவுத் திட்டம் என்­பது அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையை பெற்றுக் கொள்­வ­தற்­கா­ன­தாகும்.

வரவு – செல­வுத்­திட்டம் தோற்­க­டிக்­கப்­ப­டு­மானால் பிர­தமர் உட்­பட அமைச்­ச­ரவை வாபஸ் பெற வேண்டும். இது தான் எமது அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

நிதி நிர்­வா­கத்­துக்­கான அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­துக்கே பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் நிதி அமைச்­ச­ரினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற வரவு செல­வுத்­திட்­டத்தை முன்­வைத்­ததும் அதில் குறை­பா­டுகள் இருப்பின் குழு­நி­லையின் போது திருத்­தங்­களை மேற்­கொள்ள முடியும். அத்­துடன் அது நிறை­வுக்கு வர வேண்டும். இதன் பின்னர் வரவு செல­வுத்­திட்­டத்தைக் காரணம் காட்டி நிதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர­மு­டி­யாது.

நாம் எந்­த­வொரு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கும் முகம் கொடுப்போம். அதற்குத் தயா­ரா­கவும் இருக்­கிறோம். எனினும் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கே நாம் மதிப்­ப­ளிப்போம். இங்கு கொண்டு வர முயற்­சிக்­கப்­பட்­டி­ருப்­ப­தான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யா­னது நிதி அமைச்­ச­ருக்கு எதி­ராக அல்­லாது அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­ன­தா­கவே இருக்­கி­றது. மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நாம் வரவு செலவுத் திட்­டத்தை நிறை­வேற்றிக் கொண்­டுள்ளோம். அதனால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு நாம் அனு­ம­திக்கப் போவ­தில்லை.

தேவைப்­பட்டால் பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழுவை நிய­மித்து அதில் மேற்­படி விட­யங்­களை உள்­வாங்கி ஆராய முடியும்.

இதுவே சிறப்­பா­ன­தா­கவும் அமையும். அதன் போது விட­யங்­களை அறிக்­கை­யாக சமர்ப்­பித்து அதில் தவ­றுகள் கண்­ட­றி­யப்­பட்டால் அது குறித்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்குச் செல்ல முடியும்.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொள்­வ­தற்கோ அல்­லது தெரிவுக் குழு­வுக்கு செல்­வ­தற்கோ எது­வா­னாலும் நாம் தயா­ரா­கவே இருக்­கிறோம். ஆனால் யார் இந்­நாட்டில் இல­வசக் கல்­வியை இல்­லாது செய்­தது. இதனை நான் ஒப்­பு­வித்தால் நீங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­யத்­த­யாரா என பந்­துல குண­வர்த்­த­ன­விடம் கேள்­வி­யெ­ழுப்­பினார். இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கிறேன். வடக்கின் கல்­வித்­து­றைக்­கான நிதியை யார் இல்­லாது செய்­தது. அந்­தத்­த­வ­றையும் புரிந்து யார்? தவறு செய்­த­வர்கள் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து பதவி துறக்க வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருப்பாரேயானால் அவரும் இந்தப் பாராளுமன்றத்திலிருந்து பதவி துறந்து வெளியேற வேண்டும் என்றார்.

தினேஷ்

இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது கேள்வி எழுப்பினேன். எனினும் இந்த விடயமாக ஜனவரி மாதத்தில் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. நிதியமைச்சர் தொடர்பில் பிரதமரால் வேறு யோசனைகளும் முன்வைக்கப்படலாம். அதனையும் நாம் பரிசீலிப்போம் எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு திகதி அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

சபாநாயகர்

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில் இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசித் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி மாத அமர்வின் போது ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.