வடிவமாற்றம் பெறும் அடக்குமுறை

Published By: Digital Desk 2

23 May, 2021 | 04:39 PM
image

கபில்

  

 “வடக்கில் தொல்பொருள் சின்னங்கள் பௌத்த சின்னங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அவற்றை சிங்கள பௌத்த வரலாறாக திரிபுபடுத்தி, தமிழரின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் தான் ஆபத்தானவை” 

 போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் நிகழ்த்தப்பட்டிருக்கின்ற முக்கியமான மாற்றங்களில் ஒன்று, சிங்கள பௌத்த மயமாக்கலாகும்.

காலம் காலமாக தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள், இந்த சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு அங்கமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன.

தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் அமைந்துள்ள வடக்கு கிழக்கை சிங்கள, பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள், இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கல்லோயா குடியேற்றத் திட்டமும், மகாவலி அபிவிருத்தி திட்டமும் தமிழர் நிலங்களை சூறையாடுவதற்காகவே வகுக்கப்பட்ட திட்டங்கள்.

இதன் மூலம் தான், 1911ஆம் ஆண்டில், கிழக்கில் வெறும் 3 சதவீதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை, இப்போது, 37 வீதத்தை எட்டியிருக்கிறது.

வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதலும், பௌத்த அடையாளங்களை நிறுவி, தமிழரின் பாரம்பரிய தாயக கோட்பாட்டை இல்லாதொழிப்பதும் தான் பிரதான நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தினால் நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்த செயற்பாடு மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கை புராதன பௌத்த தொல்பொருள் பிரதேசங்களாக அடையாளப்படுத்தி,சிங்கள பௌத்த ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் என நிறுவுவதில் குறியாக செயற்படுகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-23#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11