டாக்காவில் பங்களாதேஷுக்கு எதிராக முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணியில் மூவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ், இசுரு உதான மற்றும் புதுமுக வீரர் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாவது பி.சி.ஆர் சோதனையின் முடிவுகளுக்காக இலங்கை அணி காத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Series Itinerary

1st ODI - May 23, Dhaka

2nd ODI - May 25, Dhaka

3rd ODI - May 28, Dhaka