கொழும்பு திட்ட நாடு­களின் அமைச்­சர்­கள் மாநாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னிலையில் இன்று 25ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்­டலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

கொழும்பு திட்ட நாடு­களின் தலை­மைப்­ப­த­வியை இம்­முறை இலங்கை வகிப்­ப­துடன் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள அதன் தலை­வ­ராக உள்ளார்.

'சுபீட்­சத்­துக்­காக சர்­வ­தேச வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணியகம் இணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் பெறு­ம­தியை சேர்த்­துக்­கொள்ளல்' என்­பதே இம்­முறை மாநாட்டின் தொனிப்­பொ­ரு­ளாகும். ஆசிய நாடு­களை பின்­ன­ணி­யா­கக்­கொண்ட வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகம், முகா­மைத்­துவம் மற்றும் ஒப்­பந்தம் செய்­யப்­பட்ட தொழி­லா­ளர்கள் தொடர்பில் ஆலோ­ச­னைகள் அடங்­கிய செயற்­பா­டாக இந்த மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது.

பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான், சீனா இந்­தியா, நேபாளம், இந்­தோனே­சியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்­லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகள் கலந்­து­கொள்­கின்­றன. கம்­போ­டி­யாவும் கலந்­து­கொள்­ள­வுள்­ளமை விசேட அம்சமாகும்.