இந்தியவில் கொவிட்-19 இரண்டாம் அலையில் சிக்கி 420 மருத்துவர்கள் உயிரிழப்பு

By Vishnu

23 May, 2021 | 09:42 AM
image

இந்தியாவின் தொற்று நோயின் இரண்டாவது அலையின்போது நாடு முழுவதும் குறைந்தது 420 வைத்தியர்கள் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு டெல்லியில் பதிவாகியுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளது.

வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சில முக்கிய மருத்துவர்களில் முன்னாள் சுகாதார அமைச்சரும் மருத்துவருமான ஏ.கே.வலியா, புகழ்பெற்ற இருதயநோய் நிபுணரும், ஐ.எம்.ஏ-வின் முன்னாள் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் மற்றும் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ஆர்.கே.ஹிம்தானி ஆகியோரும் அடங்குவர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தரவுகளின்படி டெல்லியில் 100 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 முதல் அலையின் போது 747 மருத்துவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தனர்.

19.05.2021 வரையான காலக் கட்டத்தில் இந்தியாவில் கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கை 1,076  என்று  இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ராஜன் சர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right