நாட்டிலுள்ள அனைத்து மதுபான உரிமம் பெற்ற நிலையங்களையும் இம்மாதம் 25 ஆம் திகதி வரை மூட வேண்டும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு(21.05.2021) 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில்,  எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நாட்டில் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொவிட் நிலைவரம் எவ்வாறுள்ளது என்பதை மதிப்பீடு செய்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.