கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப் பட வேண்டும் - இம்ரான் மஹ்ரூப் எம்.பி

Published By: Digital Desk 3

22 May, 2021 | 09:15 PM
image

கொரோனாவினால் மரணமடைவோர் தற்போது ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப் பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சகல பாகங்களிலும் கொரோனாவினால் மரணமடைவோரின் உடல்கள் இன, மத பேதமின்றி ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் மிகக் குறுகிய காலத்தில் 200 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

வைத்தியர்களின் அறிக்கைப்படி அடுத்து வரும் வாரங்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். இப்படி அதிகரிக்கும் போது ஓட்டமாவடியில் அடக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி போதாமல் போகலாம். 

எனவே, இப்போதே கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் இது குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே இறக்காமம், புத்தளம், மன்னார், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் மாற்று இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பொருத்தமானவற்றை உறுதிப்படுத்தி அவ்வப்பிரதேசத்தோடு அண்டிய பகுதி உடல்கள் அவ்வப்பகுதிகளில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யலாம்.

இறந்த உடல்கள் இராணுவப் பாதுகாப்போடு தான் ஓட்டமாவடிக்ககு எடுத்தச் செல்லப்படுகின்றன. இதற்காக அரசுக்கு செலவீனங்கள் உள்ளன. இவ்வாறு மாற்று இடங்களை உறுதிப் படுத்துவதன் மூலம் தூரங்களைக் குறைத்து அரச செலவினங்களையும் குறைக்க முடியும்.

எனவே, அரசு இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களையும் அடையாளப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பது மிகவும் உசிதமானது என இம்ரான் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55