(எம்.மனோசித்ரா)

கொவிட் - 19 வைரசின் பரவல் காரணமாக நாட்டிலுள்ள சுகாதார வழிமுறைகளைக் கருத்திற்கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விசாரணைகளிற்கு அழைத்து நடாத்தப்படும் விசாரணைகள், பொதுமக்கள் தினம் உட்பட தனிப்பட்ட சந்திப்புக்கள் மீண்டும் அறிவிக்கும்வரை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செய்யப்படும் சகல முறைப்பாடுகளையும் கீழ் காணும் தொலைநகல் இலக்கம் அல்லது மின்னஞ்சல் அல்லது தபால் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனைக்கருத்திற்கொண்டு இத்தீர்மானம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பிலுள்ள பிரதான காரியாலயம், அநுராதபுரம் , அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, கண்டி, கல்முனை, யாழ்ப்பாணம், மாத்தறை, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய காரியாலயங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.