இத்தாலியில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 159 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய இத்தாலியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 6.2 ரிச்டராக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 159 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.