நீக்கப்பட்டது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட நினைவுப் பலகை

Published By: Digital Desk 2

22 May, 2021 | 07:09 PM
image

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டிடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட நினைவு பலகையை நீதி அமைச்சர் அலி சப்ரி உடனடியாக நீக்கியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தின் கட்டிட திறப்பு விழாவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நினைவு பலகையில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமான், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு இன்று காலை கொண்டு வந்திருந்தார்.

அதையடுத்து, நீதி அமைச்சர் அலி சப்ரி, சட்ட மா அதிபர் திணைக்களத்திலுள்ள குறித்த நினைவு பலகையை உடனடியாக நீக்கியுள்ளார்.இவ்வாறு குறித்த நினைவு பலகை நீக்கப்பட்டமையை, நீதி அமைச்சர் அலி சப்ரி தொலைபேசி ஊடாக தனக்கு அறிவித்தாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் வீரகேசரி செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21