(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஜேர்மனியில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இலங்கையின் யுப்புன் அபேகோன் 10.09 செக்கன்களில் போட்டித் தூரத்தை ஓடி முடித்து முதலிடம் பெற்றார்.

காற்றிக் வேகம் + 2.2 என பதிவானதன் காரணமாக இதனை இலங்கை சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படாது. எனினும், எந்தவொரு காலநிலையிலும் இலங்கை வீரரொருவரால் பதிவான சிறந்த நேரப் பெறுதியாகும்.

10.05 செக்கன்கள் என்ற ஒலிம்பிக் தகுதி மட்டத்தை அடைந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதே யுப்புன்  அபேகோனின் நோக்கமாக காணப்படுகிறது. 

இவர் அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் 10.15 செக்கன்களில் ஓடி முடித்து தனக்குச் சொந்தமாகவிருந்த இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை புதுப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.