இலங்கையில் 44 கொரோனா மரணங்கள் பதிவு !

22 May, 2021 | 06:49 AM
image

இலங்கையில் நேற்றையதினம் 44 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 44 பேரும் 2021 மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைபெற்ற நிலையில், உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (21) உறுதி செய்துள்ளார். 

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1132 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு கொவிட் தொற்றால் இறந்த 44 பேரும் அட்டவிரகொல்லாவ, ஹொரம்பல்;ல, அம்பலாங்கொட, கலல்கொட, ஹிந்தகல, புலத்சிங்கள, ஹொரண, கல்பாத்த, குடாவஸ்கடுவ, பிஹிம்புவ, அநுராதபுரம், மன்னார், ரத்கம, இமதூவ, மக்கொன, மத்துகம, வேயங்கொட, அத்துருகிரிய, செவனகல, மல்லாவ, கிரிமெட்டியாவ, மேல் கட்டுனேரிய, கண்டி, பரகஸ்தோட்டை, களுத்துறை வடக்கு, வலல்லாவிட்ட, பேருவளை, பயாகல, கொழும்பு 12, கொழும்பு 02, பொல்கஸ்ஓவிட்ட, காலி, நாக்கவத்த, றாகம, பன்னிப்பிட்டிய, ஹோமாகம, நாரங்கொட, கனேபொல, கொக்கரல்ல, அலஹிட்டியாவ, ஹிந்தகொல்ல, பண்டாரகொஸ்வத்த போன்ற பிரதேசங்களை வதிவிடமாகக் கொண்டவர்களாவர்

அவர்களில் 23 பேர் 71 வயதைக் கடந்தவர்களாவர். 11 பேர் 61 தொடக்கம் 70 வயதிற்குட்பட்டவர்கள், 07 பேர் 51 தொடக்கம் 60 வயதிற்குட்பட்டவர், இருவர் 31 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவர், ஒருவர் 21 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இவர்களின் மரணங்களுக்கான அடிப்படைக் காரணிகளாக கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் உருவாகிய சிக்கலான நிலைமைகள் காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 30 பேர் ஆண்கள் என்பதுடன் ஏனைய 14 பேரும் பெண்களாவர்.

இதேவேளை, 20.05.2021 ஆம் திகதி கொரோனா தொற்றால் 38 பேர் உயிரிழந்ததாக  அறிக்கைப்படுத்தப்பட்டாலும் அது 37 என நிவர்த்தி செய்யப்பட வேண்டியதுடன், அதற்கமைய அன்றைய தினம் (20) பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் மொத்த மரணங்கள் 1088 என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41