நாட்டில் தொடர்ந்தும் நாளாந்தம் 3 ஆயிரத்திற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவு

Published By: Digital Desk 4

21 May, 2021 | 08:31 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் பரவலின் தீவிர நிலைமை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கிறது. இரண்டாவது நாளாகவும் 3000 இற்கும் அதிகமான தொற்றாளர் எண்ணிக்கையும் 30 இற்கும் அதிகமான மரணங்களும் பதிவாகின.

நேற்று மாத்திரம் 38 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.  இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இவ்வாறு 38 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உடுகிந்த, லுணுகல, பலாங்கொட, கட்டுநாயக்க, பாதுருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓயா, பண்டாரகொஸ்வத்த, பொரளை, பாதெனிய, தோரயாய, பொல்கஹாவெல, கல்கமுவ, சியம்பலாபே, மத்துகம, எதெனவத்தை, நாவலபிட்டி, குருணாகல், யட்டியாந்தோட்டை, பொல்கஹாவெல, பெலிஹூல்ஓய, நேபட, கெகுணுகொல்ல, நிக்கவரெட்டிய, வரகாப்பொல, அம்பிட்டிய, மாரஸ்ஸன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் 71 வயதுக்கு மேற்பட்ட 24 பேரும் , 61 - 70 வயதுக்கு இடைப்பட்ட 10 பேரும் , 51 - 60 வயதுக்கு இடைப்பட்ட நபரொருவரும் , 41 - 50 வயதுக்கு இடைப்பட்ட நபரொருவரும், 31 - 60 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும் உள்ளடங்குகின்றனர். கொவிட் நிமோனியா, நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள் இவர்களில் உயிரிழப்புக்களுக்கான காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று வெள்ளிக்கிழமை இரசு 8.30 மணி வரை 3538 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நேற்று மாலை வரை நாட்டில் ஒரு இலட்சத்து 58 323 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 60 697 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் உருவாகிய கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 25 360 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 33 056 தொற்றாளர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை 1828 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹாவில் அதிக தொற்றாளர்கள்

நேற்று வியாழக்கிழமை நாட்டில் 3443 கொவிட் தொற்றாளர்களில் இருவர் மாத்திரம் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர். ஏனைய 3441 தொற்றாளர்களும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்களாவர். வியாழனன்று கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இம்மாவட்டத்தில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 822 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் அதிகளவான தொற்றாளர் எண்ணிக்கை பதிவாகியது. புதன்கிழமை இங்கு 761 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே போன்று கொழும்பில் அதிகளவான தொற்றாளர் எண்ணிக்கை பதிவாகியது. இம்மாவட்டத்தில் 674 தொற்றாளர்களும் , களுத்துறையில் 287 தொற்றாளர்களும் எஞ்சிய 1658 தொற்றாளர்கள் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் இனங்காணப்பட்டனர்.

இன்று முடக்கப்பட்ட பகுதிகள்

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.  அதற்கமைய யாழில் பலாலி பொலிஸ் பிரிவில் பலாலி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பொலிஸ் பிரிவில் கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று மொனராகலை மாவட்டத்தில் செவனகல பொலிஸ் பிரிவில் கிரிவௌ, செவனகல, பஹிராவ, அபரத்தவெல, அபரேகல, மஹகம மற்றும் இதிகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லேரியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர ஏனைய அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கம்பஹா, களுத்துறை, கேகாலை, புத்தளம், அம்பாறை, காலி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் 199 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15